திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா
X

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தி, துணைத் தலைவர் மற்றும் நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுடன் பொங்கலிட்டு இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

காவல் துறையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன் தலைமையில் நேற்று பொங்கல் வைத்தும், விளையாட்டுப்போட்டிகள் நடத்தியும் சமத்துவ பொங்கலானது கொண்டாடப்பட்டது. இதில் காவல் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருணாச்சலா மழலையர் பள்ளியில் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்து பள்ளி மாணவர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஏ. சி. மணி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய செயலாளர் அன்பழகன் துரைமாமது மோகன் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு

வந்தவாசி அருகே பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களை பாரம்பரிய மேளம் அடித்து வரவேற்று கௌரவித்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களை பாரம்பரிய மேளம் அடித்து பூத்தூவி வரவேற்று பொங்கல் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமபுற பகுதிகளில் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக பாரம்பரிய முறைப்படி மேளம் அடித்து அவர்களை கௌரவிக்கும் வகையில் பூக்கள் தூவி அவர்களை வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் பரிசாக வேட்டி சேலைகள் மற்றும் கரும்பு வழங்கி அவர்களை கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil