சப்த கன்னிகள் கோயில் மகா கும்பாபிஷேகம்

சப்த கன்னிகள் கோயில் மகா கும்பாபிஷேகம்
X

ஸ்ரீ வேடியப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சப்த கன்னிகள் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள சப்த கன்னிகள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி கோவில்களாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மற்றும் வாஸ்து சாந்தி, நாடி சந்தானம், மகாபூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள் அவற்றை தலையில் சுமந்து கோயிலை வளம் வந்தனர் இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் கலசங்களில் இருந்த புனித நீர் சப்த கன்னிகள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . நேற்று வியாழக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள், வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கோயில் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீகல்லாயி வேடியப்பன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகல்லாயி வேடியப்பன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டு வந்தன. வியாழக்கிழமை காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலைப் பூஜை, மகா தீபாராதனை, மகாபூா்ணாஹுதி, யாத்ரா தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் அடங்கிய கலசம் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கோயில் கோபுரம், மூலவா் சந்நிதி மீது ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

விழாவில், ஊராட்சித் தலைவா் கோவிந்தசாமி, துணைத் தலைவா் பாரதி, ஒன்றியக்குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன், விழாக்குழுத் தலைவா் பாபி, கோயில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai solutions for small business