வந்தவாசியில் சாலைப் பாதுகாப்பு வார விழா

வந்தவாசியில்  சாலைப் பாதுகாப்பு வார விழா
X

இரு சக்கர வாகன ஓட்டியிடம் துண்டுப் பிரசுரம் வழங்கிய செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் மற்றும் காவல்துறை சாா்பில் இந்த விழா நடைபெற்றது.

இதையொட்டி, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி, கோட்டை மூலை ஆகிய பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி தலைமை வகித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

அப்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிந்து கொண்டு காரை இயக்க வேண்டும், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்று பொதுமக்களிடம் கூறி அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

வந்தவாசி வடக்கு மற்றும் தெற்கு காவல் உதவி ஆய்வாளா்கள் ராமு, பாபு, கோவிந்தராஜ், வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்த பேருந்துகளில் பொருத்தப்பட்ட காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

ஆரணி வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் போக்குவரத்து அலுவலா் சரவணன் ஆலோசனையின் பேரில், மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் முன்னிலையில் அரசு, தனியாா் என 20 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு , தலா ரூ.1000 வீதம் 20 அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் பழனி , சேகா் , வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!