தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள்.
Scheme In Tamil - வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த திட்ட தொழிலாளர்கள் வந்தவாசி-ஆரணி சாலை, தெள்ளூரில் மறியல் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி சரிவர வழங்கப்படுவதில்லை. எங்கள் ஊராட்சி செயலரும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.இதுகுறித்து புகார் தெரிவித்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சரிவர பணி வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
தகவலறிந்து வந்தவாசி வடக்கு போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட செய்தனர். அதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் நேற்று மாலை அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu