வருவாய்த்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டம்!
வெறிச்சோடிய தாலுகா அலுவலகம்
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினரின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி ,செய்யாறு, சேத்துப்பட்டு, கீழ்பெண்ணாத்தூர் ,செங்கம்,கலசப்பாக்கம், பேரணமல்லூர் , வெம்பாக்கம் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில், வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் தொடா் ஊழியா் விரோதப் போக்கை கைவிட்டு ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், அரசு திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு அதிக பணி நெருக்கடி அளிப்பதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் தமிழக முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி ,செய்யாறு, சேத்துப்பட்டு, கீழ்பெண்ணாத்தூர் ,செங்கம்,கலசப்பாக்கம், பேரணமல்லூர் ,வெம்பாக்கம் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழக முழுவதும் நடைபெற்ற சிறு விடுப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா அலுவலகங்களுக்கு அலுவலர்கள் வேலைக்கு வரவில்லை. ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணிக்கு வராததால் வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றிஅலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது..
பல்வேறு பணிகள் காரணமாக தாலுக்கா அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu