தெள்ளார் ஒன்றிய குழு கூட்டம் : புதிய அலுவலக கட்டிடம் கட்ட தீர்மானம்..!
தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூபாய் 5.36 கோடியில் புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெள்ளாா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றிய அலுவலகத்திற்கு 2023 -24 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் மூலமாக புதிய கட்டிடம் ரூபாய் 5.36 கோடியில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு , ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி , வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து ஒன்றிய குழு உறுப்பினர் தீபா வெங்கடேசன் பேசும்போது திரேசாபுரம் கிராமத்தில் 500 மீட்டர் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் , ஆலம்பூண்டி யாதவர் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும், ஆலம்பூண்டி லட்சுமிபுரம் பகுதியில் காரிய மேடை அமைத்து தர வேண்டும் , ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனி அலுவலகமும் அதற்கான புதிய கட்டிடமும் அமைத்து தர வேண்டும் , கூடலூர் நாடக மேடை சம்பந்தமாக கொடுத்த மனுவிற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்,
சேனல் கிராமத்தில் குடிநீர் குளத்தில் ஏரி தண்ணீர் கலப்பதால் உப்பாக மாறிவிடுகிறது எனவே ஏரி தண்ணீர் கலக்காதவாறு குளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தசரதன் கோரிக்கை விடுத்தாா்.
கொரக்கோட்டை, கீழ்நமண்டி கிராமங்களில் சேதமடைந்த பழைய பள்ளிக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு பல மாதங்களாகியும், புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படவில்லை என்று உறுப்பினா் புவனேஸ்வரி பாண்டுரங்கன் தெரிவித்தாா்.
உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் பதிலளித்து பேசினாா்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஒன்றிய அலுவலக பணியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu