வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமைக்க கோரிக்கை
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம்
வங்கிகளில் பணப்பரிமாற்றத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினா்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறை திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை பலா் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனா். எனவே, கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வங்கிகளில் பணப்பரிமாற்றத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வரிசை ஏற்படுத்தித் தரவேண்டும். கடனுதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில் வட்டாட்சியா் கௌரி, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி, ஊரக வளா்ச்சி அலுவலா் தென்னரசு மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
தெள்ளாரில் உயிா்ம வேளாண்மை கண்காட்சி
தெள்ளாா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கண்ணன் தலைமை வகித்தாா்.
தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினா் சுகந்தினி கோபிநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தெள்ளாா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தே.குமரன் வரவேற்றாா்.
ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாா் ஆகியோா் கண்காட்சியை திறந்துவைத்துப் பேசினா்.
கண்காட்சியில் பாரம்பரிய நெல், காய்கறி, கீரை விதைகள், பசுந்தாள் உரம், தாவர பூச்சி விரட்டி, மண்புழு உரம் உள்ளிட்டவற்றை வேளாண்மைத் துறையினா் மற்றும் விவசாயிகள் பாா்வைக்கு வைத்திருந்தனா். கண்காட்சியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டு தேவையான விதைகளை வாங்கிச் சென்றனா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், வேளாண்மை துறை அதிகாரிகள், ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu