சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X
சொத்துவரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வந்தவாசி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் சொத்துவரி போது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையர் முஸ்தாபா அறிவுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட இருபத்திநான்கு வார்டுகளிலும் சொத்துவரி போது சீராய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் , உதவிப் பணியாளர்கள் வீடுகள் கடைகளை அளவீடு செய்ய வருவார்கள். அப்போது வீடுகள் கடைகளின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், நகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!