வந்தவாசியில் வாடகை பாக்கி: நகராட்சி கடைக்கு அதிகாரிகள் 'சீல்'

வந்தவாசியில் வாடகை பாக்கி: நகராட்சி கடைக்கு அதிகாரிகள் சீல்
X

கடைக்கு  சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்

வந்தவாசியில் வாடகை பாக்கி வைத்திருந்த நகராட்சிக்குச் சொந்தமான கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனா் .

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமாக பழைய மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதியில் 62 கடைகள் உள்ளன. இதில் வாடகை பாக்கி வைத்துள்ள கடை வாடகைதாரா்களுக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லையாம்.

இதையடுத்து, மேலாளா் ரவி தலைமையில், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராமலிங்கம், கணக்காளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் வாடகை பாக்கியை வசூலிக்க கடைகளுக்கு நேரில் சென்றனா்.

இதில், கடை வாடகைதாரா்களிடமிருந்து மொத்தம் ரூ.6.90 லட்சம் பாக்கித் தொகை வசூலிக்கப்பட்டது. அப்போது, ரூ.1.50 லட்சம் வாடகைப் பாக்கி வைத்திருந்தும் பாக்கி பணம் செலுத்தாத ஒரு கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம்

வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

வந்தவாசி நகராட்சி பழைய பஸ் நிலையத்தின் உள்பகுதியில் வளையல், விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

இந்த கடை குத்தகைதாரர் வாடகை செலுத்த வேண்டி நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் வாடகை வசூலிக்க சென்றனர்.

அப்போது, கடை குத்தகைதாரர் நான் வளையல் வியாபாரம் செய்து வருகிறேன். நடைபாதையிலும் கடை வைத்துள்ளதால் வியாபாரம் குறைவாகிறது.

வாடகை கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆக்கரமிப்பு கடைகளை அகற்றினால் வாடகை செலுத்துவதாக கூறினார். அதை தொடர்ந்து நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் ஊழியர்கள் நடைபாதையில் ஆக்கரமித்து வளையல், பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து குத்தகைதாரரிடம் வாடகையை வசூலித்தனர்.

ஒரே நாளில் வந்தவாசி நகராட்சி அலுவலர்கள் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாடகை பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைத்தல் என தடாலடியாக நகராட்சி அலுவலர்கள் இறங்கியதால் வந்தவாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil