வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

வந்தவாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாமாகவே முன்வந்து அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த மாதம் பஜார் வீதி, தேரடி பகுதி, அச்சரபாக்கம் சாலை, காந்தி சாலை ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அகற்ற நெடுஞ்சாலைதுறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் முன் வந்தனர்.

அப்போது வியாபாரிகள் சங்கத்தினர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே, பண்டிகைகள் முடிந்ததும் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடுவோம் என் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் காலையில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேசுவரய்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டாட்சியர் முருகானந்தம், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜகணபதி, உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் வெங்கடேஷ், சாலை ஆய்வாளர் துலுக்கானம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture