வந்தவாசியில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
வந்தவாசி நகரில் ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
வந்தவாசி நகராட்சி 20-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காமராஜா் நகா் பகுதியையொட்டி, சென்னாவரம் ஏரிக்கு நீா் செல்லும் வரத்துக் கால்வாய் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 4 வீடுகளின் முன்பகுதி இந்தக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்படி வந்தவாசி பொதுப்பணித் துறையினா் இந்த நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை காலை தொடங்கினா். வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்புடன் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் டி.பாபு, நகராட்சி கட்டட ஆய்வாளா் பழனிவேல், 20-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் சுமாா் 129 சதுர மீட்டா் அளவிலான ஆக்கிரமிப்புகளை இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu