பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
X

அரசு நடுநிலைப்பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் கல்வி வட்டாரத்திலுள்ள செம்மாம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம்வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 146 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கான ஆண்டு ஆய்வு நடந்தது. இதில் மாணவர்களின் தமிழ்,ஆங்கிலம் வாசித்தல் திறன், எழுதும் திறன் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாணவர்களிடம் ஆய்வு செய்தார்.

முன்னதாக மாணவர்களின் கையெழுத்து 2 வரி 4 வரி நோட்டுகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் மாணவர்களின் ஆங்கிலம் வாசிப்புத் திறன் குறித்து மாணவர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி