கோயில் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோயில் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

 சாலை மறியலில் ஈடுபட்ட  பொதுமக்கள்

கோயில் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ந்தவாசி அருகேயுள்ள கண்டவரட்டி கிராமத்தில் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி அந்தக் கிராம இளைஞா் ஒருவா் தனியாா் நிறுவன கைப்பேசி போபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசியை அடுத்த கண்டவரட்டி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனராம். இதனால், கோயிலுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள், இதுகுறித்து அவா்களிடம் கேட்டபோது, அந்த இடம் தங்களது பட்டா நிலம் என்று கூறினராம்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சரத்குமார் அதிகாரிகளிடம் கிராம பொதுமக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர் சரத்குமார் திடீரென அங்குள்ள செல்போன் அவர் மீது ஏரி போராட்டம் மேற்கொண்டார். தகவல் அறிந்த பொன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் இறங்குவேன் என்று சரத்குமாா் தெரிவித்தாராம்.

சமரசத்தை ஏற்காத நிலையில் கிராம பொதுமக்கள்

இதே நேரத்தில், கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம பொதுமக்கள் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, கண்டவரட்டி கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் கண்டவரட்டி கிராமத்துக்குச் சென்று கோயிலுக்குச் செல்லும் பாதையை ஆய்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பொன்னுசாமி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், சரத்குமாரும் போராட்டத்தை கைவிட்டு கைப்பேசி நிறுவன கோபுரத்தில் இருந்து இறங்கினாா். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் வந்தவாசி சேத்துப்பட்டு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

Next Story