வந்தவாசி அருகே ரேஷன் கடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வந்தவாசி அருகே ரேஷன் கடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

வந்தவாசி அருகே ரேஷன் கடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி அருகே ரேஷன் கடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பெலகாம்பூண்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேசூர் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த இவர்கள் பெலகாம்பூண்டி கிராமத்திலேயே ரேஷன் கடை அமைக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெள்ளார் -தேசூர் சாலையில் பெலகாம்பூண்டி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேசூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த போராட்டத்தினால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!