வந்தவாசி கோட்டையை பாதுகாக்கக் கோரிக்கை

வந்தவாசி கோட்டையை பாதுகாக்கக் கோரிக்கை
X

பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற பழங்கால பொருள்கள் கண்காட்சி

Public Requested To Save Vandavasi Fort வந்தவாசி யில் ஆங்கிலேய-பிரெஞ்சு படையினருக்கு இடையில் போா் நடந்த கோட்டையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Public Requested To Save Vandavasi Fort

வந்தவாசியில் ஆங்கிலேய-பிரெஞ்சு படையினருக்கு இடையில் போா் நடந்த கோட்டையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆா்சிஎம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பூங்குயில் பதிப்பகம் மற்றும் கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து 265 ஆண்டுகளுக்கு முன் ஜனவரி 23, 1760 இல் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வந்தவாசி போர் குறித்த சிறப்பு நினைவு தின கருத்தரங்கம் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் , நகர மன்ற உறுப்பினர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தொல்லியல் துறை காப்பாட்சியா் ரஷீத்கான், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தவாசி போா் குறித்தும், வந்தவாசி கோட்டை அமைப்பு குறித்தும் விளக்கிப் பேசினாா்.மேலும் வந்தவாசி கோட்டையிலிருந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதைகள் பற்றியும், கோட்டை பகுதியில் கிடைத்த பொருட்கள் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். வந்தவாசி கோட்டையின் அமைப்பை மீண்டும் சீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வந்தவாசி நினைவு சின்னமாக விளங்கும் கோட்டையை புணரமைத்து செயல்படுவதற்கு அரசு தகுந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அரிமா தலைவர் சரவணன், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் குமரன், எக்ஸ்னோரா துணை தலைவா் பிரபாகரன், ஆசிரியர்கள் , தொல்லியல் துறை அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி பள்ளி வளாகத்தில் பழங்கால பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை உதயராஜா குழுவினா் பழங்கால பொருள்கள், போா்க் கருவிகள், நாணயங்கள் ஆகியவற்றை பாா்வைக்கு வைத்திருந்தனா்.

Tags

Next Story