போனஸ் அறிவிப்பை எதிர்த்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

போனஸ் அறிவிப்பை எதிர்த்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
X

அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்ததை கண்டித்து சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்ததை கண்டித்து சிஐடியு சார்பில் வந்தவாசி பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பின் நிர்வாகி உதயகுமார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை செய்த பிறகே தமிழக அரசு போனஸ் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!