மின்பொறியாளர் அலுவலகம் மாற்றப்படுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

மின்பொறியாளர் அலுவலகம் மாற்றப்படுவதை கண்டித்து  சாலை மறியல் போராட்டம்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார்  சமரசம் செய்தனர்.

Protests Today - வந்தவாசி அருகே மின்வாரிய அலுவலகம் வேறு ஊருக்கு மாற்றப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Protests Today -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தில் இளநிலை மின்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்இணைப்பு அளித்தல், மின்கட்டணம் பெறுதல், மின்பழுது நீக்குதல் உள்ளிட்டவை இந்த அலுவலகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த அலுவலகத்தை அருகில் உள்ள மற்றொரு ஊருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஓசூர் கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மின் அலுவலக மாற்றத்தை கண்டித்து அந்த மின் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அங்கு சென்று சமரசம் செய்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டபோது இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!