ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி நகராட்சியில் இணையும் ஊராட்சிகள் உத்தேச பட்டியல்

ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி நகராட்சியில் இணையும் ஊராட்சிகள் உத்தேச பட்டியல்
X

வந்தவாசி நகராட்சி

ஆரணி, திருவத்திபுரம் மற்றும் வந்தவாசி நகராட்சியில் இணையும் ஊராட்சிகள் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, திருவத்திபுரம் மற்றும் வந்தவாசி ஆகிய மூன்று நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகளின் உத்தேச பட்டியலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் இன்றி அமையாது ஒன்றாக உள்ளது. ஊராட்சி அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களும், அதிகமாக இருப்பதால் உள்ளாட்சி அமைப்பு கட்டமைப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியுடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளனர். இதன் மூலம் நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பரப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகராட்சிகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகராட்சி, திருவத்திபுரம் நகராட்சி (செய்யார்) மற்றும் வந்தவாசி நகராட்சிகள் விரிவடைய உள்ளன. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் விரிவடைய உள்ளன.

ஆரணி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி மிக முக்கிய நகராட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆரணி நகராட்சியுடன் நான்கு ஊராட்சிகள் இணையுள்ளன. ஆரணி நகராட்சி ரத்தினமங்கலம், இரும்பேடு, பையூர், முள்ளி பட்டு ஆகிய கிராமங்கள் இணைய உள்ளன . இதன் மூலம் ஆரணி நகராட்சி 37.57 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ள பெரிய நகராட்சியாக மாற உள்ளது.

திருவத்திபுரம் நகராட்சி , செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது திருவத்திபுரம் நகராட்சி இணைந்துள்ளது. இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் புதிதாக நான்கு ஊராட்சிகள் இணைய உள்ளன. இந்த நகராட்சியில் கீழ் புதுப்பாக்கம், பைங்கினார், வடதண்டலம், புளியரம்பாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணையுள்ளனர். இதன்மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியாக உருவெடுக்க உள்ளது.

வந்தவாசி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 31,3 17 பொதுமக்கள் உள்ளன, 9.71 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ளன. தற்போது வந்தவாசி நகராட்சியுடன் 5 ஊராட்சிகள் இணைய உள்ளன. கீழ்சாத்தமங்கலம், சென்னவரம், பாதிரி, அமையப்பட்டு மற்றும் செம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைய உள்ளன. சுமார் 13,000 மக்கள் இந்த ஊராட்சிகளில் வசித்து வருகின்றனர் ‌. தற்போது வந்தவாசி நகராட்சி 21.81 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ளது. இதன் மூலம் வந்தவாசி மக்கள் தொகை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட நகராட்சியாக உருவெடுக்க உள்ளது ‌.

ஊராட்சிகள் இணைப்பதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், பதிவுகளும் முடிவடையுள்ள நிலையில் வருகின்ற நகராட்சி தேர்தல் நடைபெறும்போது இந்த ஊராட்சிக்கும் சேர்ந்து, நகராட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!