பள்ளி மாணவர்களின் 72 மணி நேர தனித்திறன் உலக சாதனை முயற்சி

பள்ளி மாணவர்களின் 72 மணி நேர தனித்திறன் உலக சாதனை  முயற்சி
X

பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மேற்கொண்ட யோகாசனம்

வந்தவாசி அருகே தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 72 மணி நேர தனித்திறன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள ஹாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பீனிக்ஸ் உலக சாதனை அமைப்புடன் இணைந்து, 72 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சியை வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் தொடக்கி வைத்தார். இதில், மாணவ, மாணவியரின் தனித்திறன் பாடல்போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி, சிலம்பாட்டம் மற்றும் நடனம் உள்ளிட்டவைகளில் தொடர்ந்து, இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இந்த உலக சாதனை நிகழ்வு போட்டி நேற்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

பீனிக்ஸ் அமைப்பின் இயக்குனர் குற்றாலீஸ்வரன் தலைமையிலான குழுவினர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இதில் செய்யாறு , சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story
future of ai in retail