வந்தவாசியில் கிணற்றில் தவறி விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு…
சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யாநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சீனிவாசன் இவர், திருவண்ணாலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
சீனிவாசன் தனது நண்பர்களான முத்துவேல்குமரன், கலைவாணன், கவியரசன், வேலாயுதம் ஆகியோருடன் கீழ்குவளைவேடு கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசன் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக சிவா என்பவரின் விவசாய நிலத்திற்கு இன்று சென்றுள்ளார்.
அங்கு சீனிவாசன் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். உடனே அவருடன் சென்றவர்கள் வந்தவாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடியபோதிலும், சீனிவாசனை உயிருடன் மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட சீனிவாசன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
மேலும், சீனிவாசன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் படித்து வந்த கல்லூரி நிர்வாகத்திற்கும், சென்னையில் உள்ள பெற்றோருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
சீனிவாசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்தவாசி அரசு பொது மருத்துவமனை முன்பு திரண்டர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சீனிவாசனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் எந போலீஸார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu