வந்தவாசியில் கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிதை நூலை வெளியிட்டு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன்
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவிஞா் தமிழ்ராசாவின் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா வந்தவாசியில் நடைபெற்றது.
வந்தவாசி ரோட்டரி கழக அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். சங்கச் செயலா் வெங்கிடேசன் வரவேற்றாா்.
நிகழ்வில், கவிஞா் தமிழ்ராசாவின் 'எங்கே போயின மரவட்டைகள்' என்ற ஹைக்கூ கவிதை நூலை திமுக மாவட்டச் செயலா் தரணிவேந்தன் வெளியிட மருத்துவா் குமாா் பெற்றுக் கொண்டாா்.
நூல் குறித்து கவிஞா் முருகேஷ், தொழிலதிபா் இஷாக், அரிமா சங்க மாவட்ட தலைவா் சரவணன் ஆகியோா் பேசினா். நூலாசிரியா் தமிழ்ராசா ஏற்புரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய சாகித்திய அகாடமியின் பால புராஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் முருகேஷ் பேசுகையில், வந்தவாசி வட்ட கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகத்தின் ஏதாவது ஒரு செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் சங்க துணை செயலாளர் கவிஞர் தமிழ் ராசா எழுதிய ஹைக்கூ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழி என்பது வாசிக்க வைக்கும் மொழி மட்டுமல்ல, அதை எழுத வைக்கும் மொழி.
தமிழை முறையாக படித்தவர்கள் பெரும்பாலும் கவிதைகள் எழுதுவதில்லை. பிற துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம் கவிதைகள் எழுதுகிறார்கள். என்னை பொறுத்தவரை புதுக்கவிதை எழுதுவது என்பது இலகுவானது. ஆனால் ஹைக்கூ கவிதைகள் எழுதுவது அப்படிப்பட்டதல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் எழுதி வந்தாலும் எதையும் ஆவணப்படுத்தியதில்லை.
எழுத்தை ஆவண படுத்துவது என்பது அவ்வளவு முக்கியமானது. ஜப்பானின் கவிதை வடிவிலான ஹைக்கூ இந்தியாவிற்கே வந்தபோது கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் எழுதி தொடங்கி வைத்த ஹைக்கூ இயக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இந்த வகையில் இயற்கையோடு பின்னிப்பிணைந்த பல கவிதைகளை இந்த நூலில் எழுதி இருக்கும் கவிஞர் தமிழ் ராசாவை பாராட்டுகிறேன் என பேசினார்.
நூலை வெளியிட்டு பேசிய வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், நூலாசிரியர் பல இடங்களில் இழந்து போன பண்பாட்டை இயற்கையை மறக்காத அன்றைய வாழ்க்கையை நினைவூட்டி அழகாக தனது கவிதை வடிவில் கூறியுள்ளார் என கூறினார்.
வந்தவாசி ரெட்கிராஸ் சங்கச் செயலா் சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
தகவலுக்காக :
ஹைக்கூ என்பது ஜப்பானிய மூன்று வரி கவிதை வடிவம் ஆகும். ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்ட மூன்று வரிகளில் அமைந்திருக்க வேண்டும். ஹைக்கூ கவிதைகள் இயற்கை, மனித உணர்வு, வாழ்க்கையின் தத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்படலாம்.
ஹைக்கூ கவிதை நூல்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கவிஞரின் கவிதைகளை அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகளை உள்ளடக்கியிருக்கும். ஹைக்கூ கவிதை நூல்கள் வாசகர்களுக்கு ஹைக்கூ கவிதையின் அழகு மற்றும் நுட்பத்தை அறிந்துகொள்ள உதவும்.
ஹைக்கூ கவிதை நூல்களின் சில எடுத்துக்காட்டுகள்:
"குயில்கள் கூவும், மரங்கள் காற்றில் அசையும், வசந்தம் வருகிறது" - மரியா சூசாமி
"மழை பெய்கிறது, பறவைகள் கூட்டமாக பறக்கின்றன, இயற்கையின் அழகு" - பாப் ஹோப்
"மௌனம், ஒரு துளி மழை விழுகிறது, இயற்கையின் இசை" - அருண்குமார்
இந்த நூல்கள் அனைத்தும் ஹைக்கூ கவிதையின் அழகு மற்றும் நுட்பத்தை வெளிப்படுத்துகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu