பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
X

உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பா ம க மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய பின்னர் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் தலைமை வகித்தார்.

அதேபோல் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி தேரடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!