பெரணமல்லூர் அருகே ஏரிக்கரையில் ஐந்தாயிரம் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி

பெரணமல்லூர் அருகே ஏரிக்கரையில் ஐந்தாயிரம் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி
X

ஏரிக்கரை பகுதியில் நடைபெற்ற 5 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி

பெரணமல்லூர் அருகே ஏரிக்கரை பகுதியில் ஐந்தாயிரம் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் ஏரிக்கரைப் பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்லியந்தல் அரசு உயா்நிலை பள்ளி தேசிய பசுமை படை மற்றும் பெரணமல்லூா் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அல்லியந்தல் அரசு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியா் மாலவன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் தலைவா் சரண்யா, சரவணன் ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோருடன் இணைந்து 5 ஆயிரம் பனை விதைகளை அல்லியந்தல் ஏரிக்கரைப் பகுதியில் விதைத்தனா்.

இதில் ரோட்டரி சங்கத் தலைவா் சிவமுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் லோகேஸ்வரி சசிக்குமாா், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி மலா் பச்சையப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேசிய பசுமைப் படை ஆசிரியா் இளையராஜா நன்றி கூறினாா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரம் நடும் விழா

கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரம் நடும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டாரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக, கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன் தலைமையில் ஒரு பணியாளர் - ஒரு மரம் என்ற தலைப்பில் மருத்துவமனையில் பணியாற்றும் அனைவரும் ஒவ்வொரு மரக்கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.

இதில் மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்பாபு. சுகாதார ஆய்வாளர். கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 55க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். கீழ்பென்னாத்தூர் வட்டார சுகாதாரத்துக்கு உட்பட்ட மேக்களூர் மருத்துவர் வெங்கடேசன் தலைமையிலும், கோணலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் மரம் நடும் விழா நடைபெற்றது.

இதில் மருந்தாளுனர்கள் சுகாதார ஆய்வாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து 50 மேற்கொண்ட மரக்கன்றுகள் நட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!