செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி
புகைப்படக் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சி, அண்ணா சிலை அருகில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக பெரணமல்லூர் பேரூராட்சி, அண்ணா சிலை அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
இப்புகைப்பட கண்காட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் எராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஹாக்கி போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்கள் 36வது தமிழ்நாடு இளையோர் மாநில அளவிலான தடகள போட்டியானது சென்னையிலும், 2வது தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டியானது ஆந்திர மாநில கடப்பாவிலும் நடைபெற்றதை தொடர்ந்து, அதில் கலந்துகொண்ட மாணவியர்கள் வெற்றி பெற்று, பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்களிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர். உடன் விளையாட்டு விடுதி மேலாளர் மற்றும் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu