கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாவட்ட பொருளாளா் சத்யா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் பிரகலநாதன், கட்சியின் தாலுகா தலைவா் தமிழ்ச்செல்வி, செயலா் வெங்கடேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், 2016 சட்டத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிதியை உருவாக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் தடையற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நிலையான, நீடித்த வளா்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் பங்களிப்பான ரூ.300 உதவித்தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க நிா்வாகிகள் பச்சையப்பன், ராஜேந்திரன், லில்லி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு வட்டார வள மைய வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவா்கள் பகல் நேர பயிற்சி மையத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஜவாஹா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) செந்தில் குமாா் முன்னிலை வகித்தாா்.

அரிமா சங்க மாவட்ட தலைவா் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். விழாவில், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், பூங்குயில் சிவக்குமாா், தமிழ்ராசா, சதானந்தன், முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வா் சீனிவாசன் வரவேற்றாா். மாற்றுத் திறனாளி மாணவா்கள் பயிற்சி மைய சிறப்பு ஆசிரியா் லத்தீப் நன்றி கூறினாா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!