/* */

பங்குனி உத்திர திருவிழா திருவண்ணாமலை மாவட்டத்தில் கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பங்குனி உத்திர திருவிழா திருவண்ணாமலை மாவட்டத்தில் கோலாகலம்
X

பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வாணாபுரம் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும் கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்தும் உடலில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மேலும் உடலில் அலகு குத்தி கனரக வாகனங்களை இழுத்துச் சென்றனர். வேலையாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 3 பக்தர்கள் டிராக்டரை பரவசத்துடன் இழுத்துச் சென்றனர்.

மேலும் சிலர் பறவை காவடி எடுத்தும் செக்கிழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஒரு பக்தர் 108 அலகு குத்தி மயில் காவடி எடுத்து வந்தார். இதேபோல் வரகூரில் பக்தர் ஒருவர் குழந்தையை சுமந்தவாறு செடல் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தியதும், சிறுவன் அலகு குத்தி அந்தரத்தில் பறந்தவாறு வந்ததும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

வாழவச்சனூர், பெருந்துறைப்பட்டு, தலையாம்பள்ளம், சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, தச்சம்பட்டு, பேரயாம்பட்டு, அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், மெய்யூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும் தேர் இழுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

கண்ணமங்கலம்

ராமநாதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது. கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வீரகோவில் மைதானத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பக்தர்கள் சார்பில் கண்ணமங்கலம் வரசித்தி வினாயகர் கோயிலிலிருந்து மேளதாளத்துடன் திருமண சீர்வரிசை ஊர்வலமாக மணப்பந்தலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராமநாதீஸ்வரர் பர்வதவர்த்தினி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

பக்தர்கள் சாமிக்கு திருமண மொய் எழுதினர். பின்னர் திருமண விருந்து வழங்கப்பட்டது. பிற்பகலில் பஞ்சமூர்த்திகளுடன் சாமி அம்மன் திருமணக்கோலத்தில் வீதி உலா நடைபெற்றது.

இதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை மொட்டை மலையில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவிலிலும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலசப்பாக்கம்

கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய இரட்டைச்சிவாலயத்தில் நேற்று மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திரம் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும், மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாண வைபவத்தை வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடந்தது. இவ்விழாவில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டால் அவரவர் விருப்பப்படி உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் சுவாமிக்கு பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசியாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ சண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகமான பால் தயிர் சந்தனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து வேதம் மந்திரங்கள் முழங்க சண்முகநாதருக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மங்கல மேள வாத்தியங்கள் முழங்க சண்முகநாதருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க திருக்கல்யாண உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சண்முகநாதரை தரிசனம் செய்து சென்றனர்.

Updated On: 6 April 2023 1:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு