வந்தவாசி, ஆரணி ஒன்றிய குழு கூட்டம்..!
வந்தவாசி ஒன்றிய குழு கூட்டம்
வந்தவாசி மற்றும் ஆரணியில் ஒன்றிய குழு கூட்டங்கள் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்தவாசி ஒன்றிய குழுவின் கூட்டம் நடைபெற்றது
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜன்பாபு, ஸ்ரீதா், துணைத் தலைவா் விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினா் தனசேகா் பேசினாா்.
இதையடுத்து, இளங்காடு கூட்டுச் சாலையில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினா் சுகந்தி தணிகைவேல் பேசினாா். பின்னா், பேசிய ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை வகித்தாா். துணை தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் 11 பாழடைந்த கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இடிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத்தலைவர் பேசும்போது வேலாயுதம், ஏன் மற்ற உறுப்பினர்களிடமும் பாழடைந்த கட்டிடங்களின் விவரங்களை கேட்டு அப்பணியும் இத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்றார்
அதற்கு தலைவர் நீங்கள் தகவல் தெரிவித்தால் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றி தருகிறோம் என்றார். மீண்டும் துணை தலைவர் கூறும்போது அடுத்த கூட்டத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்படுமா , ஏன் முன்கூட்டியே அனைவரிடமும் கேட்கவில்லை என கேட்டார் .
அதற்கு அதிமுக உறுப்பினர் சில வார்த்தைகளை கூறியதால் துணைத் தலைவர் மற்றும் அதிமுக உறுப்பினர் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
அப்போது அதிகாரி இந்த கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தாருங்கள் என உறுப்பினர்களிடம் கூறினார். அதற்கு மூன்று உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் கைகளை உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.
அப்போது துணைத் தலைவர் இதே போல அனைத்து தீர்மானங்களும் ஒவ்வொரு முறையும் கையை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என கூறினார் .இதனால் உறுப்பினர்களிடையே மீண்டும் காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் தங்களது பகுதிகளுக்கு தேவையான குறைகள் குறித்து பேசினார்கள்.
பின்னர் குண்ணத்தூா், புதுப்பாளையம், காட்டுகாநல்லூா், அழகுசேனை, அத்திமலைப்பட்டு, மதுரைபெரும்பட்டுா், பாளைய ஏகாம்பரநல்லூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் பேவா் பிளாக் அமைத்தல், நெற்களம் அமைத்தல், சமையலறை கட்டடம் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2023-2024 ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.41.73 லட்சம் ஒதுக்கீடு செய்வதும். மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள், வளா்ச்சி பணிகளுக்கு உறுப்பினா்கள் ஒப்புதலுடன் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu