மின்கட்டண உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டம்
X

மின்கட்டண உயர்வை கண்டித்து  கையில் அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 

வந்தவாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அருகே மின்கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கோழிப்புலியூர் கூட்டுச்சா லையில், பெரணமல்லூர் வட்டார சிபிஎம் குழு சார்பில், மின்கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரணமல்லூர் வட்டார செயலாளர் சேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி கவுன்சிலர் கௌதம்முத்து முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்வன் கண்டன உரையாற்றினார். மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறவும் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரப் பயன்பாட்டுக்கு அளவிடுதை மாற்றி மாதமொரு முறை அளவீடு செய்யவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கபெரணமல்லூர் ஒன்றிய தலைவர் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ராமதாஸ், கட்சி இடைக் குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியினர், விவசாய தொழிலாளர் சங்க, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மங்களம்

வந்தவாசி அருகே மங்களம் மாமண்டூர் கூட்டு சாலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் மாமண்டூர் கூட்டு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார குழு உறுப்பினர் சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் யாசர் அரபத், முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர், விவசாயிகள் சங்கத் தலைவர் ஹரிதாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பங்கேற்று மின்கட்டண உயர்வை கண்டித்தும் மாதம்தோறும் மின்னளவு கணக்கிட்டு முறையை அமல்படுத்த கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!