திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு!
ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி கட்டிடங்களை திறந்து வைத்த நகர மன்ற தலைவர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரணி, கலசப்பாக்கம் மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டன.
இந்த புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்தவாறு திறந்துவைத்தாா். இதனால் அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆரணி
ஆரணி ஊராட்சி ஒன்றியம், முள்ளண்டிரம் ஊராட்சிக்கு உள்பட்ட மதுரா மூலத்தாங்கல், வேதாஜிபுரம், வெட்டியாந்தொழுவம், எஸ்.யு.வனம் ஊராட்சிக்கு உள்பட்ட பங்களா ஆகிய பகுதிகளில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம், அரியப்பாடி கிராமத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட 2 கட்டடங்கள் என 6 பள்ளிக் கட்டங்கள் ரூ.1.68 கோடி செலவில் கட்டப்பட்டிருந்தன.
இந்த புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்தவாறு திறந்துவைத்தாா்.
அதேவேளையில், ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் ஊராட்சி மதுரா மூலத்தாங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் திமுக ஒன்றியச் செயலா் அன்பழகன் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, திமுக மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மோகன், துரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குமரேசன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரஞ்சித், விமலா காசி, குமரவேல், சுகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி, பொறியாளா் மதுசூதனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட சி.கெங்கம்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ரூ.42.65 லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டடம் கட்டப்பட்டிருந்தன. புதிய கட்டடங்களால் இனி அரசு வேலைகள் முன்பை விட வேகமாக நடைபெறும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்தவாறு திறந்துவைத்தாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த சி.கெங்கம்பட்டு கிராமத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.
ஆணையா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் உதயசேகரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரணை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.28 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டிருந்தன.
இந்த புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்தவாறு திறந்துவைத்தாா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரணை கிராம தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலா் தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணி முன்னிலை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் மதன்குமாா் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜன்பாபு, தசரதன், திமுக நகரச் செயலா் தயாளன், ஒன்றியச் செயலா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu