வந்தவாசி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம்
விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட 50 படுக்கைகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடத்தை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோா் திறந்துவைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், அரசினர் பொ து மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத் திறப்புவிழா திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்ட பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, ஆரணி நாடாளு மன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலை வகித்தனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் புதிய கட்டடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்துப் பேசினா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில்,
சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை என்று ஓமந்தூரார் மருத்துவமனை மட்டுமே இருந்தது . தற்பொழுது திராவிட ஆட்சியில் 480 கோடி ரூபாய் செலவில் சைதாப் பேட்டையில் மருத்துவமனை அமைக்கப் பட்டுள்ளது. மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித் துறை என்று இல்லாமல் எல்லா துறைகளிலும் சாதனை படைக்கின்ற அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது.
5 கோடி செலவில் 50 படுக்கைகளுடன் விபத்து அறுவை சிகிச்சை பிரிவு வந்தவாசியில் துவக்கப் பட்டுள் ளது. இது வந்தவாசிக்கு வரப்பிரசாதம். இந்த கட்டிடமும், வழூர் மேம்ப டு த்தப்ப ட ்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் செலவில் வட்டார பொது சுகாதார மையமும் இன்று திறக்கப்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் ,சிடி ஸ்கேன் ,டிஜிட்டல் எக்ஸ்ரே குறித்து கோரிக்கைகள் வந்திருக்கின்றன. ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் மதிப்பீடு 8 கோடி ரூபாய் ஆகும். மாவட்ட மருத்துவமனை யான செய்யாறு மருத்துவ மனைக்கு இன்னும் அந்த வசதி செய்து தரப்படவில்லை, அரசாங்கம் நிதிநிலைகளை ஆராய்ந்து செய்யாறு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்ட பின் தாலுகாக்களுக்கு கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.
வந்தவாசிக்கு டிஜிட்டல் எக்ஸ்ரேவும்,சி டி ஸ்கேனும்,3 கோடி செலவில் கொண்டுவரப்படும். 5.25 கோடியில் கட்டப்பட்டு வரும் தாய்சேய் நலப் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும்.எப்பொழுதும் தொகுதிக்கான சிந்தனையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
தொடர்ந்து பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊரக நலப்பணி அலுவலர்கள், மருத்துவர்கள் , செவிலியர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu