விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத் குமார்,  திறந்து வைத்தார்.

வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று கொவளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நெல் தூற்றும் எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால்,ராதா ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, முன்னாள் தலைவர் பழனி,ஊராட்சி மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!