வந்தவாசி அருகே புதிய மின் மாற்றி தொடக்கம்

வந்தவாசி அருகே புதிய மின் மாற்றி தொடக்கம்
X

வந்தவாசி அருகே புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார்  அம்பேத்குமார் எம்.எல்.ஏ.

வந்தவாசி அருகே புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கர் குமார் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் புதிய மின்மாற்றி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மின் செயற்பொறியாளர் மீனா குமாரி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, தெள்ளார் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், அ.தி.மு.க. மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், வட்ட அதிகாரி மீனா குமாரி, உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி மின் பொறியாளர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!