வெள்ளத்தால் பயிர் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

வெள்ளத்தால் பயிர் சேதம்:  எம்எல்ஏ ஆய்வு
X

பயிர் சேதங்களை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ அம்பேத்குமார்

வந்தவாசி பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை எம்எல்ஏ அம்பேத்குமார் ஆய்வு செய்தார்

வந்தவாசியை அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பயிர் சேதம் அடைந்த விவசாய நிலங்களை வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர் மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய உபரிநீர் ஸ்ரீ ரங்கராஜபுரம் பகுதியிலுள்ள விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் சேதம் அடைந்தன.

அப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் , பயிர் சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் முருகானந்தம் , ஒன்றிய செயலாளர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!