வந்தவாசி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

வந்தவாசி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

வந்தவாசி,பெரணமல்லூர்,தெள்ளார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 78 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

வந்தவாசி,பெரணமல்லூர்,தெள்ளார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 557 பயனாளிகளுக்கு ரூ.78 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, எம்‌.கே.விஷ்ணுபிரசாத்‌ எம்‌.பி., எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ எஸ்‌.அம்பேத்குமார்‌, ஓ.ஜோதி, மு.பெ.கிரி, கூடுதல்‌ ஆட்சியர்‌ மு.பிரதாப்‌ உள்ளிட்டோர்‌ முன்னிலை வகித்தனர்‌. திமுக மாவட்ட பொறுப்பாளர்‌ எம்‌.எஸ்‌.தரணிவேந்தன்‌ வரவேற்றார்‌.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 2,381 பேருக்கு பிரதமர்‌ வீடு, 54 பேருக்கு இலவச மனைப்‌ பட்டா, 54 பேருக்கு கோவிட்‌ இறப்பு நிவாரணத்‌ தொகை, 224 பேருக்கு முதியோர்‌ உதவித்‌ தொகை உள்பட மொத்தம்‌ 6,557 பேருக்கு ரூ.78 கோடியில்‌ நலத்‌ திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் திமுக மாவட்ட அவைத்‌ தலைவர்‌ கே.ஆர்‌.சீதாபதி, வட்டாட்சியர்‌ முருகானந்தம்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ சு.வி.மூர்த்தி, ஆர்‌.குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!