வந்தவாசி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
வந்தவாசி அருகே உள்ள மாம்பட்டு கிராமத்தில் மகா சக்தி முத்துமாரியம்மன், ஆதி சக்தி காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கும், 16 கைகள் கொண்ட காளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகி லட்மணசுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடந்தன.
பின்னர் மாலையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடத்தி பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சுந்தரேஸ்வரருக்கு பட்டுவேட்டியும், மீனாட்சி அம்னுக்கு பட்டுப்புடவையையும் தங்கத் தாலி மற்றும் 16 வகையான பழ வகைகளையும் கோவிலை சுற்றி பக்தர்கள் ஊர்வலமாக சுற்றி வந்து வைத்தனர்.
அதன்பின் பின்னர் லட்சுமண சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். அதன் பிறகு மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரருக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக கோவிலை வலம் வந்து ஊஞ்சலில் வைத்தனர். பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன. பம்பை உடுக்கை நாதஸ்வரம் ஆகிய இன்னிசை நடந்தது. பின்னர் நடன நிகழ்ச்சி நடந்தது
இதில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், செஞ்சி, சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து வணங்கி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu