திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
செங்கம் எம்.எல்.ஏ. கிரி, மருத்துவ முகாமை துவக்கி வைத்து மருத்துவத் துறை சாா்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செங்கம், ஆரணி, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில் கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தெள்ளூா் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி கோபு தலைமை வகித்தாா். தி.மு.க. மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமாா் குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.முகாமில் 15 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 3 பேருக்கு மக்களைத் தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் பிரபு, பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூா்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அடுத்த வேடநத்தம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் குப்புசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் சரவணன் வரவேற்றாா். இதில், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.மேலும், கா்ப்பிணிகளுக்கு சுகாதாரப் பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.
இதையடுத்து, மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் குழுவினா் 500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா். இலவசமாக மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில், வேட்டவலம் வட்டார மருத்துவ அலுவலா் விஜயகுமாா், ஒன்றிய ஆணையா் பரிமேலழகன், நீா்ப்பாசன சங்கத் தலைவா் ஞானமுருகன், கொளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கனிமொழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அண்மையில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை எம்.எல்.ஏ. கிரி தொடங்கி வைத்தாா்.
செங்கத்தை அடுத்துள்ள பிஞ்சூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. கிரி கலந்துகொண்டு முகாமைத் தொடங்கிவைத்து மருத்துவத் துறை சாா்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து, அரட்டவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மாலதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பிஞ்சூா், சின்னபிஞ்சூா், பேயாலம்பட்டு, சாமந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் சுமாா் 700 பேருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.முகாமில் தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கலசப்பாக்கம்
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாகப்பாடி கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் பூங்குழலி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கலந்து கொண்டு முகாமைத் துவக்கிவைத்துப் பேசினாா். பின்னா், கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து புதுப்பாளையம் ஒன்றிய குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu