வந்தவாசி பகுதி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

வந்தவாசி பகுதி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
X

அரசு உயர்நிலைப் பள்ளியில் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்

வந்தவாசி பகுதி அரசு பள்ளி மாணவிகளுக்கு ஓராண்டு இலவச தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் குழந்தை தொழிலாளா் முறை அகற்றும் திட்டத்தின் கீழ், வந்தவாசி பகுதி பள்ளி மாணவிகளுக்கு ஓராண்டு இலவச தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், வந்தவாசி, சளுக்கை, மருதாடு, சாலவேடு, கீழ்க்கொடுங்காலூா், கீழ்க்குவளைவேடு ஆகிய 6 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் சுமாா் ஆயிரம் மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என ஓராண்டு வரை இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையொட்டி, சளுக்கை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளா் ஜான் சுகுமாா் தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் இளங்கோவன் தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

பயிற்சியாளா் பவானி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்தாா். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிா்வாகிகள் ராபின், சிரில், சுதாகா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிலம்பம் போட்டியில் சாதனை

திருவண்ணாமலை அடுத்த கொளக்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள், உலக சாதனை முயற்சிக்காக நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில், ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளை தொடர்ந்து 30 நிமிடங்கள் வெளிப்படுத்தும் உலக சாதனை முயற்சி, நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அதன்படி, திருவண்ணாமலை அடுத்த கொளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவிகள் சி.லக்ஷிதா, கு.பவித்ரா ஆகியோர் கலந்துகொண்டு, தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். மேலும், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகளில் இந்த இரு மாணவிகளும் பங்கேற்று ஏற்கனவே பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!