/* */

வந்தவாசியில் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வந்தவாசியில் நடைபெற்ற மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

HIGHLIGHTS

வந்தவாசியில் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
X

பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

வந்தவாசியில் நடைபெற்ற மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் எண்ணிக்கை வருகை விபரம் , மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய உணவு திட்டம் , மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றினை நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கன்வாடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு அங்கன்வாடிகளை தூய்மையாக வைத்திருக்க அங்கன்வாடி மைய அலுவலர்களுக்கு தெரிவித்தார்.

நடுக்குப்பம் ஊராட்சியில் 15 வது நிதிக்குழுவின் மாநிலத்தின் திட்ட கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு மேலும் ஊராட்சிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை இணைகளில் சேகரித்து உற்பத்தியை அதிகப்படுத்தி விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் வந்தவாசி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தட்டுகள் டம்ளர்கள் போன்றவற்றினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்களைக் கொண்டு நான்கு குழுக்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்து ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து மஞ்சப்பை விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா ,தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் தமிழச்சி இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன், நகராட்சி பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கம் ,வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2024 1:22 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  5. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  6. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  7. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  9. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி
  10. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா