வந்தவாசி நகராட்சி பூங்காவில் இளம் காதல் ஜோடி தற்கொலை

வந்தவாசி நகராட்சி பூங்காவில் இளம் காதல் ஜோடி தற்கொலை
X

வந்தவாசி நகராட்சி பூங்காவில் இளம் காதல் ஜோடி தற்கொலை

வந்தவாசி நகராட்சி பூங்காவில் இளம் காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை. உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி பூங்காவில் பொதுமக்கள் தினமும் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி சென்று வருகின்றனர். வழக்கம்போல நேற்றுமாலை பொதுமக்கள் நடை பயிற்சி சென்றனர். அப்போது பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள மரத்தடியில் ஒரு இளம் பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன், ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்தது. அந்த செல்போன்கள் மூலம் போலீசார் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

போலீசார் இருவரின் உடல்களை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் அக்ஷயா வயது 19 என்பதும் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்தக் இளைஞரின் பெயர் சங்கர் எனவும் தெரியவந்தது. மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!