மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அல்லாத அணியில் இணைகிறது இந்திய குடியரசு கட்சி
செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் செ.கு. தமிழரசன்.
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அல்லாத அணியில் இணைவோம் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க செகு தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தலித் சிறுமியை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்எல்ஏ மகன் சித்ரவதை செய்த சம்பவமே இதற்கு உதாரணம்.
குறைந்தபட்சம் வாரம் ஒரு சம்பவமாவது தலித்துகளுக்கு எதிராக நடைபெறுகிறது. இதுகுறித்து தி.மு.க.அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ராமா் கோயிலை வைத்து பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அல்லாத அணியுடன் கூட்டணி தேர்ந்து போட்டியிடுவோம்.
இவ்வாறு செ.கு.தமிழரசன் கூறினார்.
பேட்டியின் போது, கட்சி நிா்வாகிகள் அன்புவேந்தன், கெளரிசங்கா், வந்தை மோகன், ரவிச்சந்திரன், பாதிரி பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மலைவாழ் மக்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா பொதுக்கூட்டம் வந்தவாசி கோட்டையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா, துணைத் தலைவா் பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அப்துல்காதா் வரவேற்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சிவக்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செல்வன், சேகரன், காட்டுநாயக்கன் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் அய்யனாா், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் அரிதாசு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினா் திண்டிவனம் சாலை, தேரடி, பஜாா் வீதி வழியாக கோட்டை சென்றடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu