மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிருக்கு ரூ 34 லட்சம்‌. கடனுதவி

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிருக்கு ரூ 34 லட்சம்‌. கடனுதவி
X

பெண்களுக்கு நேரடி மற்றும்‌ சிறுதொழில்‌ கடன்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின்‌ வந்தவாசி கிளையில்‌ மகளிருக்கு ரூ.34 லட்சம்‌ கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின்‌ வந்தவாசி கிளையில்‌ மகளிருக்கு ரூ.34 லட்சம்‌. கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய கூட்டுறவு வங்கி மற்றும்‌ வழூர்‌ அகரம்‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கம்‌ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வங்கியின்‌ உதவிப்‌ பொது மேலாளர்கள்‌ ப.கந்தசாமி, சு.கணபதி ஆகியோர்‌ தலைமை வகித்தனர்‌.

கள மேலாளர்‌ மோ.யுவராஜ்‌, கிளை மேலாளர்‌ ஜெ. முருகன்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. மத்திய கூட்டுறவு வங்கித்‌ தலைவர்‌ பெருமாள்‌ நகர்‌ கே. ராஜன்‌ கடனுதவிகளை வழங்கிப்‌ பேசினார்‌.

விழாவில்‌ மகளிர்‌ சுயஉதவிக்‌ குழுவினர்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ உள்ளிட்ட 117 பெண்களுக்கு நேரடி மற்றும்‌ சிறுதொழில்‌ கடன்களாக மொத்தம்‌ ரூ.34 லட்சம்‌ வழங்கப்பட்டது.

இதில் வங்கி நிர்வாகக்‌ குழு உறுப்பினர்கள்‌ சி.தனசேகரன்‌, லதா சக்கரபாணி, வள்ளி ராஜா, ஜீவரத்தினம்‌உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!