திருவண்ணாமலை மாவட்டத்தில் எழுத்தறிவு இயக்க விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள்
திருவண்ணாமலை, மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளார், ஊராட்சி ஒன்றியம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், வாசிப்பு இயக்க திட்டம் தொடக்க விழா, மற்றும் புதிய நூலக திறப்பு விழா, ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள் தலைமை வகித்தார். வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தெள்ளார், வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன், கலந்து கொண்டு. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 22-23-ம் ஆண்டிற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க, தெரியாத, அனைவருக்கும் எழுத்தும், எண்ணறிதல், வாக்காளர் உரிமை, சுற்றுச்சூழல் அறிதல், பணம் இல்ல பரிமாற்றம், இணைய வழி கல்வி, ஆகியவை குறித்து விழிப்புணர்வு துண்டு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் , புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொறுப்பாளர்கள், மற்றும் பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கம்... திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 18 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் எண், எழுத்தறிவித்தல் சிறப்பு மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி, செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கியது. பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் காமத் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவா்கள் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.
கீழ்பென்னாத்தூர்..கீழ்பென்னாத்தூர் வட்டார வளமையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கியத் தெருக்கள் வழியாக சென்று வட்டார வள மையத்தை அடைந்தது.
இதில் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் திட்டம், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத அனைவரையும் உடனடியாக பள்ளியில் சேர்ப்போம், எழுத படிக்க தெரியாதோர் யாரும் இல்லாத நிலையை உருவாக்குவோம். கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மாற்றுவோம். என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu