டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
வந்தவாசி, அருகே டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு ரூ. 6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை லோடு ஆட்டோவில் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வாச்சனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வாணாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் , என்பவரும், சூபர்வைசராக தானிப்பாடியை சேர்ந்த சேகர், என்பவரும் பணி புரிந்து வருகின்றனர். நேற்று இரவு விற்பனையான தொகையை எடுத்துக்கொண்டு இருவரும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பிற்பகல் வந்து கடையை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். கடையின் பின்புறம் உள்ள சுவரில் பெரிய அளவிலான துளை போடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த சுமார் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் பொதுமேலாளர் புஷ்பலதா அந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், கோவிந்தராஜுலு மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு மர்ம ஆசாமிகள் லோடு ஆட்டோவில் மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.
இரு சக்கர வாகனம் திருடியவா் கைது
வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த ஊா்குடி கிராமத்தைச் சேர்ந்தவா் கட்டிட மேற்பாா்வையாளா் எட்டியப்பன்,
இவா் கடந்த வெள்ளிக்கிழமை மேல்பாதி-வல்லம் சாலையில் உள்ள சிக்கன் பக்கோடா கடை முன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எட்டியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா், அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்தனா்.
இதில், வல்லம் கிராமத்தைச் சோந்த அபிமன்யு, என்பவா் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அபிமன்யுவை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu