உள்ளாட்சித் தேர்தல் தலித்துகளுக்கு குறைவான இட ஒதுக்கீடு: செ.கு தமிழரசன்

உள்ளாட்சித் தேர்தல் தலித்துகளுக்கு குறைவான இட ஒதுக்கீடு: செ.கு தமிழரசன்
X

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன்

உள்ளாட்சித் தேர்தல் தலித்துகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய குடியரசு கட்சிதலைவர் செ.கு. தமிழரசன் புகார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில் தலித்துகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன இந்திய குடியரசு கட்சியின் தலைவர் தமிழரசன் குற்றம்சாட்டினார். இது குறித்து வந்தவாசியில் செய்தியாளர்களிடம் கூறும்போது.

தலித் பிரிவினருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தமிழகத்தில் உள்ள 21 மேயர் பதவிகளில் நான்கு பதவிகள் தலித்துகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும் ஆனால் மூன்று பதவிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி உறுப்பினர் பதவிகளும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிட வேண்டும். இதன் பின்னரே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் அம்பேத்கார் சிலைகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை அகற்ற வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!