திருவண்ணாமலை திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
X

திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.

திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் யாகசாலை பூஜை கால பூஜை நடத்தப்பட்டு கடம் புறப்பட்டு நேற்று காலை விமான கலசத்திற்கு புனித தண்ணீரை ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர்

கீழ்பெண்ணாத்தூரை அடுத்த கனபாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்சாபந்தனம், கடம், யாகசாலை பிரவேசம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, தம்பதி சங்கல்பம், நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. காலை 8 மணிக்கு கோயில் கோபுரங்கள், மூலவா்களுக்கு புனித நீா் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, கோயிலில் உள்ள மகா காளியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், கீழ்பென்னாத்தூா், கனபாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி திருமலை சமுத்திரம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திமுக வடக்கு மாவட்டச் செயலா் தரணிவேந்தன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். விழாவில் நகா்மன்றத் தலைவா் மணி, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், அதிமுக சாா்பில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பட்டாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது. சுற்றியுள்ள கிராமங்களைச் சோந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது