ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகம்
X

ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம் 

பழைமை வாய்ந்த ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெலாசூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் அமைந்துள்ளது.

மேலும், இதன் அருகே ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலும் உள்ளது.

ஸ்ரீலட்சுமணா், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகிய சந்நிதிகளைக் கொண்ட ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தா்கள், கிராம பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை கணபதி ஹோமம், சுதா்ஷன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல்கால யாக சாலை பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், நேற்று காலை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், தத்துவாா்ச்சனை, 2-ஆவது கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை காண்பித்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பெலாசூா், சனிக்கவாடி, கரைப்பூண்டி, பாடகம், அணியாலை, காம்பட்டு, விளாப்பாக்கம், கொம்மனந்தல், செம்மியமங்கலம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வந்தவாசி அருகே ராதா ருக்மணி வேணுகோபால சுவாமி ஆலயங்கள் மகாகும்பாபிஷேகம

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் அருள்மிக முனிவாழி அம்மன் மின்னல்வாழி அம்மன், ஸ்ரீ பாலவிநாயகர், பாலமுருகர், மற்றும் 14 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ராதா ருக்மணி வேணுகோபாலசாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, ஆலய வளாகத்தில் யாகசாலை அமைத்து, வேதவிற்பன்னர்கள் மந் தி ர ம் முழங்க , மஹாசுதர்சன ஹோமம், திருசங்கர்பனம், ரக்சா பந்தனம், பாலிகாசாதபனம், அஷ்டபந்தனம் சாத்துதல், சாயினாதீவாசம், தீர்த்த பிரசாதம், விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம்,ஸ்ரீ லக்ஷ்மி ஹோமம்,ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்திக்குப்பின் மகாபூர்ணாகுதி நடைபெற்றது.

புனிதகலசத்தைதலையிலேந்தி வந்த வேதவிற்பன்னர்கள் கோபுர கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. . பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சென்னை, தெள்ளாறு, நடுக்குப்பம், ஜப்திகாரணி, சேனல், அறுவடைதாங்கல், ஏரிப்பட்டு, கீழ்ப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது