திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!
X

அரசு அலுவலர்கள் போராட்டம் காரணமாக வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்து வேலைக்கு வராததால் வட்டாட்சியர் அலுவலகம். வெறிச்சோடியது

அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே அமுல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்கத்தொகை உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அந்த ஊதியம் வழங்காமல் தீங்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் களையப்பட வேண்டும். முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு பணிகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் ஊழியர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர்.

ஆரணி

ஆரணியில் வருவாய்த் துறையினர் விடுப்பு போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறையினர் அலுவலகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம் , பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டங்களாக போராட்டத்தை அறிவித்து முதல் கட்டமாக ஒட்டுமொத்த வருவாய்த்துறையினரும் தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த்துறையினரின் போராட்டம் பற்றி அறியாத கிராம பொதுமக்கள் அலுவலகம் வந்து மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!