ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வருகை

ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசிக்கு வருகை தந்தது.

HIGHLIGHTS

ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வருகை
X

 வந்தவாசிக்கு வருகை தந்த ஈஷா யோகா மைய ரத யாத்திரை

ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசிக்கு வருகை தந்தது.

கோவை ஈஷா யோகா மையத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மாதவரத்தில் இருந்து புறப்பட்ட ஈஷா யோகா மைய ரத யாத்திரை இரவு வந்தவாசிக்கு வருகை தந்தது. மேள தாளம் முழங்க சிவபக்தா்கள் ரதத்துக்கு வரவேற்பு அளித்தனா்.

ஆதியோகி சிலை கொண்ட ஒரு ரதமும், நாயன்மாா்கள் திருமேனி கொண்ட ஒரு ரதமும் ஒன்றன்பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. சுமாா் 50 பேர்கொண்ட தென்கைலாய பக்தி பேரவையினா் ரதத்துடன் பாதயாத்திரையாக சென்றனா்.

அப்போது, மகா சிவராத்திரி விழா குறித்த அழைப்பிதழ்கள் துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

கொசப்பட்டு ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பகவத் பிராா்த்தனை, அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம் உள்ளிட்டவையும், சனிக்கிழமை திருவாராதனம், தீபாராதனை, பூா்ணாஹுதி, சயனாதிவாசம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னா், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

Updated On: 12 Feb 2024 1:15 AM GMT

Related News