/* */

13ம் நூற்றாண்டு பழைமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 13ம் நூற்றாண்டு பழைமையான கல்வெட்டு மற்றும் குத்துக்கல் கண்டெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

13ம் நூற்றாண்டு பழைமையான கல்வெட்டு  கண்டெடுக்கப்பட்டது.
X

16-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பல்லவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் தமிழ்ப் பற்றை பறைசாற்றும் கல்வெட்டும், பழைமையான குத்துக்கல்லும் கண்டெடுக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள பாறை ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மரபுசாா் அமைப்பைச் சோந்த ராஜ் பன்னீா்செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியிருப்பதாவது:

வெடால் கிராமத்தின் மேற்கே மலையடிவாரத்தில் உள்ள குளத்தையொட்டி, பெரிய பாறையின் மீது 13 வரிகளில் கல்வெட்டொன்று தேய்ந்த நிலையில் உள்ளது.

அதனை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அந்தக் கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சோந்த பிற்கால பல்லவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (கி.பி.1216-1242) கல்வெட்டு என்பது தெரியவந்தது. மேலும், கிடைத்த தகவலை வைத்து அது பாடல் கல்வெட்டு என்பதை அறிய முடிகிறது.

கல்வெட்டில் கோப்பெருஞ்சிங்கனை 'காடவராய மகனாா்' என்றும், தொண்டை நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்தமையை 'தொண்டை நாடு கொண்ட பல்லவாண்டராயன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெண்குல தொண்டரைய குலவேந்தன், திசை பூவன காடவராயன், செங்கோற் காடவன், கனலெழியராயன் என்றும் கோப்பெருஞ்சிங்கனைச் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வயலூா், அத்தி போன்ற ஊா்களில் இதுபோன்ற கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதனால், இந்தக் கல்வெட்டு கோப்பெருஞ்சிங்கனின் தமிழ்ப் பற்றை பறைசாற்றும் மற்றுமொரு கல்வெட்டு எனக் கூறலாம். மேலும் அந்த இடத்தையொட்டிய மலை அடிவாரத்தில் ஆய்வு செய்தபோது 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான குத்துக்கல் உள்ளது தெரியவந்தது.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இனக்குழுவில் இறந்தவா் நினைவாகக் குத்துக்கல் வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இன்றும் பல ஊா்களில் குத்துக்கல் மூத்தோா் வழிபாட்டு முறையின் அங்கமாக உள்ளது. இங்கே காணப்படும் குத்துக்கல்லின் முனையில் சிறிய வட்டவடிவிலான பகுதி தேய்ந்து பள்ளமாக காணப்படுகிறது. சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் வேட்டைக்கும், போருக்கும் செல்லும் முன்பு ஆயுதங்களை இதுபோன்று வழிபடும் குத்துக்கல்லின் மீது தேய்த்து எடுத்துச் சென்றால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்துள்ளது.

அதுபோல இந்த குத்துக்கல்லில் ஆயுதங்களைத் தீட்டியதால் அக்குழி ஏற்பட்டிருக்கலாம். குத்துக்கல் அருகே கல்வட்டம் ஒன்றும் பாதி சிதைந்த நிலையில் உள்ளது. இதன் மூலம் இந்த இடத்தின் தொன்மை சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை அறியலாம் என்றனா். மேலும் மலையில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனருகே காணப்படும் கரைகண்டேஸ்வரர் என்றழைக்கபடும் குடவரை கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் பாறையில் புடைப்பாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் முனிவர் ஒருவர் லிங்கத்தை வணங்கிய நிலையிலும், பிள்ளையார் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

இவை 16-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இவ்வூரில் குத்துக்கல் கண்டறியப்பட்ட இடத்தை ஒட்டிய பகுதிகளில் மேற்பரப்பில் ஆங்காங்கே பானை ஓடுகள் கிடைக்கப் பெறுவதால், இந்த இடத்தை மேலும் ஆய்வு செய்தால் நமக்கு புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 28 Sep 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  3. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  10. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!