வந்தவாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்குழு கூட்டம்

வந்தவாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்குழு கூட்டம்
X

வந்தவாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம்.பீர்முகமது தலைமையில் நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் இமாம் ஆதம் மவுலானா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் எம்.காதர்அலி, துணை செயலாளர் டி.அப்துல் வாஹித், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஏ.அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் சத்தார் சிறப்புரை ஆற்றினார். வந்தவாசி நகருக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மன்சூர் அலி நன்றி கூறினார்.

கூட்டத்தில் பெரிய பள்ளி வாசல் முன்பு உயர்மின் விளக்கு அமைத்து கொடுக்க நகராட்சியை கேட்டு கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!